
பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பென்குயின்’.
இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து, வெளியீட்டுக்கு தயாராக இருந்தது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து தயாராக இருக்கும் படங்களை அமேசான் நிறுவனம் நேரடி டிஜிட்டல் வெளியீட்டுக்குக் கைப்பற்றி வருகிறது.
‘பொன்மகள் வந்தாள்’, ‘டக்கர்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘பெண்குயின்’ படத்தையும் அமேசான் நிறுவனம் கைப்பற்றிவிட்டது.
இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் கோலமே எனும் முதல் சிங்கிள் லிரிகள் வீடியோவை படக்குழு யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர். மகனை இழந்து தவிக்கும் கீர்த்தியின் மன வலியை இந்த பாடல் வெளிப்படுத்துகிறது.
[youtube-feed feed=1]