கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது; நெல்லையில் தொல்லியல் அருங்காட்சியகம்! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Must read

சென்னை: கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது; நெல்லையில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று அறிவித்து உள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் அகழாய்வுப் பணிகள் தொடர்பாக 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின்  பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு மாதம்  13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று காரணமாக, வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில்,  ஏற்கனவே பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள்  மீதான விவாதங்கள் ஆகஸ்டு 20ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன.  வரும் 13-ம் தேதியுடன் சட்டப்பேரவை நிறைவடைய  உள்ளது. இன்று காவல்துறை மானயி கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகின்றன.

முன்னதாக இன்று பேரவை விதி எண் 110ன்கீழ் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி,  “கீழடி அகழாய்வை மத்திய அரசு பாதியில் கைவிட்டது. ஆனால், தற்போது கீழடி உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது. கீழடி மூலம் சங்ககால தமிழர்களின் வாழ்க்கை முறையை உலகமே அறிந்துள்ளது.

2018 ஆம் ஆண்டு கீழடிக்கு நான் நேரில் சென்று பார்வையிட்டபோது,அங்கு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த வெள்ளிக்காசு கண்டறியப்பட்டது. எனவே,கீழடி நாகரிகம் கிமு ஆறாம் நூற்றாண்டு நாகரிகம் என்பது தெரியவந்துள்ளது கிமு 4ஆம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்த வெள்ளி காசு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

கொற்கை துறைமுகம் கிமு 6ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அகழாய்வு பணிக்கு ஏற்கனவே ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அகழாய்வு நடைபெறும் ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும்

இவ்வாறு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

 

More articles

Latest article