நெல்லை: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில், காதலியின் தாயாரான போலீஸ் எஸ்ஐ கிருஷ்ணகுமாரி கைது செய்யப்பட்டு உள்ளார்.
காதல் விவகாரத்தில் நெல்லை பொறியாளர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கவின் காதலியின் தாயார் எஸ்ஐ கிருஷ்ணகுமாரி கைது செய்யப்பட்டார். பல மாதங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டார். விசாரணையில் கவின் கொலை, ஆணவ கொலை என்பது தெரிய வந்தது. கவினின் காதலியின் சுர்ஜித் என்பர் இந்த கொலை செய்ததாக கூறப்பட்டது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சுர்ஜித்தின் தந்தையான உதவி சார்பு காவல் ஆய்வாளர் சரவணனையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் தந்தை, மகனை இரண்டு நாள்கள் காவலில் எடுத்து நடத்திய விசாரணையில், வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து சுர்ஜித்தின் தாயை தேடி வந்தனர்.
இதற்கிடையில், இந்த ஆணவ கொலை தொடர்பாக சுர்ஜித்தின் உறவினர் தூத்துக்குடியைச் சேர்ந்த கல்குவாரி உரிமையாளர் ஜெயபால் (29), என்பவரையும் நெல்லை மாநகர போலீசார் கைது செய்தனர். இந்த கொலை விவகாரத்தில், குற்றப்பத்திரிகையில் சுர்ஜித்தின் தாயான எஸ்.ஐ. கிருஷ்ணகுமாரி பெயர் சேர்க்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் தலைமறைவான சுர்ஜித்தின் தாயார், எஸ்.ஐ. கிருஷ்ணகுமாரியை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், கடந்த 10 மாதங்களுக்கு இன்று சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
[youtube-feed feed=1]