சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணி ‘காவேரி’ இயந்திரம் மூலம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது.

துர்காபாய் தேஷ்முக் சாலையில் க்ரீன்வேஸ் சாலை சந்திப்பு முதல் அடையாறு சந்திப்பு வரை திரு.வி.க. பாலம் வழியாக சுமார் 1.226 கி.மீ. நீளத்துக்கு சுரங்கம் அமைக்கும் பணியில் காவேரி மற்றும் அடையார் என்ற இரண்டு சுரங்கம் துளையிடும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது.

இதில் க்ரீன்வேஸ் சாலை சந்திப்பு முதல் திரு.வி.க. பாலம் வரை சுமார் 583 மீட்டர் நீளத்துக்கு சுரங்கம் தோண்டும் பணியை வெற்றிகரமாக முடித்த ‘காவிரி’ இயந்திரம் நேற்று அடையாறு ஆற்றின் கரை பகுதியை தொட்டது.

இதனையடுத்து அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கம் துளையிடும் பணியை துவங்க உள்ள இந்த இயந்திரம் நீருக்கு அடியில் மெட்ரோ சுரங்கப்பாதை அமைக்கும் முதல் இயந்திரம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

காவிரி இயந்திரத்துடன் சுரங்கம் துளையிடும் பணியில் இறங்கிய அடையார் இயந்திரம் இன்னும் 250 மீட்டர் பின்தங்கி உள்ள நிலையில் அடுத்த 20 நாளில் அதுவும் அடையாறு கரையை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கம் துளையிடும் பணியை காவிரி இயந்திரம் துவங்கியதை அடுத்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் நேற்று அந்த பணியை பார்வையிட்டனர்.