நேற்று திடீரென பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபும், நடிகர் விஜய்யும் இணையத்தில் ட்ரெண்டாகத் தொடங்கினர் .
35 வயதான நடிகை கத்ரீனா கைஃப் ஃபீட் அப் வித் தி ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினி அனைதா ஷ்ராபின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்.
அந்தப் பேட்டியில் கத்ரீனா விஜய்யைப் பற்றியும் பேசியிருக்கிறார். ஒரு விளம்பரப் படத்துக்கான ஷூட்டிங்கின்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. ஊட்டியில் நடந்தது. நான் தரையில் உட்கார்ந்து ஃபோனில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது என் கண் முன் அந்தக் கால்கள் தெரிந்தன. நான் ஃபோனில் பிஸியாக இருந்ததால் அதை சற்றும் கண்டுகொள்ளவில்லை.
சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த ஷூ கால் அங்கேயே இருப்பதை உணர்ந்தேன். அப்போது நிமிர்ந்து பார்த்தேன். அங்கே அந்த நடிகர் நின்று கொண்டிருந்தார். அவர் தான் விஜய். ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அங்கிருந்து கிளம்பிச் செல்வதை சொல்லவே அவர் எனக்காக காத்திருந்தார் ,ஆனால், நான் ஃபோனில் பிஸியாக இருந்ததால் அவர் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என காத்திருந்துள்ளார் என விஜய்யை புகழ்ந்துள்ளார் கத்ரீனா .