ஒரிசா பாஜக மக்களவை உறுப்பினரை புகழும் கஸ்தூரி

Must read

சென்னை

ரிசா மாநில பாஜக மக்களவை உறுப்பினர் ஒருவரை நடிகை கஸ்தூரி புகழ்ந்து டிவிட்டரில் பதிந்துள்ளார்.

ஒரிசா மாநிலத்தில் உள்ளது பாலசோர் மாவட்டம். தொழில் மாவட்டமான இந்த மாவட்டத்தின்  மக்களவை தொகுதியில் பாஜக வென்றுள்ளது. இந்த வெற்றி வேட்பாளர் மிகவும் வறுமயில் உள்ளவர் ஆவார். இவரை சமூக வலை தளங்களில் பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

சமீப காலமாக நடிகை கஸ்தூரி பல அரசியல் மற்றும் சமூக விழிப்புனர்வு பதிவுகளை தனது டிவிட்டரில் பதிந்து வருகிறார். இவரது அரசியல் பதிவுகள் பல நேரங்களில் சர்ச்சையை உண்டாக்குகின்றன சமூக விழிப்புனர்வு பதிவுகள் பலரிடமும் இருந்து பாராட்டு பெற்று வருகின்றன.

நடிகை கஸ்தூரி தனது டிவிட்டரில், “ஒரிசாவின் பாலசோர் தொகுதியின் புதிய மக்களவை உறுப்பினரை சந்தியுங்கள். இவர் 64 வயதான பிரதாப் சந்திர சாரங்கி. பாஜகவினர் இவரை ”ஒரிசாவின் மோடி” என அழைக்கின்றனர். இவர் குடிசையில் வசிக்கிறார். ஒரே ஒரு சைக்கிள் மட்டுமே வைத்துள்ளார்.

பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் இவர் நூற்றுக்கணக்கான பள்ளிகளை அமைத்துள்ளார். மது மற்றும் ஊழலுக்கு எதிரான ஒரு ஆர்வலரான இவர் ஆட்டோவில் சென்று பிரசாரம் செய்து கோடீஸ்வர வேட்பாளரை வென்றுள்ளார்.” என பதிந்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article