வழக்கம்போல, சமீபத்தில் தனது அரசியல் பிரவேசம் (!) குறித்து பேசி விவாதத்தை ஏற்படுத்திவிட்டார் நடிகர் ரஜினிகந்த். இவரது பேச்சு குறித்து பலரும் கருத்து தெரிவித்துவ வருகிறார்கள். இந்த நிலையில், ரஜினியின் அரசியல் பிரவேசம் என்பது  அக்கப்போர் என்று கருத்து தெரிவித்திருந்தார் நடிகை கஸ்தூரி.

கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், “நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்ப்பாராத சூழ்நிலையில் கூட டக்கென முடிவெடுக்கும் திறம்வேண்டும். வருவேனா மாட்டேனா என்றே வருடக்கணக்கில் யோசிப்பவர் ரஜினி காந்த். மேலும் போர் போர் என்று ஒரே அக்கப்போராக உள்ளது என்றும் இந்த முடிவு மிகவும் தாமதமானது” என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு ரஜினி ரசிகர் ஒருவர், “தலைவரை தாக்கி பிரபலமாவது உங்கள் தனிப்பட்ட விஷயம், அதற்காக அவர் ரசிகை என்று சொல்லி ஏமாற்ற வேண்டாம். நீங்கள் யாருடைய ரசிகை என்று பாபநாசம் ப்ரமோவில் தெரிந்தது” என்று டிவீட்டியுள்ளார்.

 

அதற்கு நடிகை கஸ்தூரியோ, “என்ன லாஜிக் பா இது? ரஜினி கூடத்தான் கமலை பாராட்டுறாரு, அப்போ அவரையும் திட்டுவியா? நீ பிறக்கறது முன்னாடி இருந்து நான் ரஜினியின் ரசிகை” என்று ரீடிவீட் செய்துள்ளார்.

இப்படி ஒரே நேரத்தில் ரஜினியையும், தங்களையும்  கலாய்த்துவிட்டாரே கஸ்தூரி என அங்காலாய்க்கிறார்கள்  ரசிகர்கள்.