ஜம்மு:

இந்திய-பாகிஸ்தான் நாடுகளின் எல்லைக் கட்டுப்பாட்டு அருகில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்துள்ளது சாரதா கோயில்.


சாரதா பீடம் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. காஷ்மீர் பண்டிதர்கள் அதிகம் வாழ்ந்த இப்பகுதி, இந்து சமய வேதங்கள் பயிற்றுவிக்கும் மையமாக விளங்கியது.

14-ம் நூற்றாண்டில் சிதிலமடைந்த சாரதா பீடத்தை காஷ்மீர் மன்னர் குலாப் சிங் 19-ம் நூற்றாண்டில் புனரமைத்து திருப்பணி செய்திருக்கிறார்.

பிரிவினைக்குப் பிறகு சாரதாபீடம் அமைந்த பகுதியை பாகிஸ்தான் நாட்டு பஷ்தூன் மக்கள் கைப்பற்றி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இணைத்தனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நீலம் பள்ளத்தாக்கில் பாரமுல்லாவிலிருந்து 60 கி.மீ தொலைவிலும், முசாபராபாத் நகரிலிருந்து 40 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

தெற்கு ஆசியாவில் மிகவும் மதிக்கப்படும் 18 கோயில்களில் சாரதா பீடமும் ஒன்று. நாலந்தா மற்றும் தக்சிலாவில் பழமையான சாரதா பீடம் குறித்து கற்பிக்கப்பட்டுள்ளது.

தங்களது கலாச்சாரத்தின் ஆதாரமாக திகழ்வதால் சாரதா கோயிலுக்கு காஷ்மீர் பண்டிதர்கள் முக்கியத்துவம் தருகிறார்கள்.

கடந்த 2009-ல் அயாஜ் ரசூல் நஜ்கி எழுதிய காஷ்மீர் பண்டிதர்களின் கலாச்சார பாரம்பரியம் என்ற புத்தகத்தில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சாரதா கோயிலுக்கு சென்ற என் மூதாதையர்களின் பக்தி என்னை மிகவும் ஆட்கொண்டுள்ளது.

தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பழமையான சாரதா பல்கலைக்கழகத்தில் ஒரு காலத்தில் 5 ஆயிரம் கல்வியாளர்கள் இருந்திருக்கிறார்கள். இந்த பல்கலைக்கழகத்தில் பெரிய நூலகமும் இருந்துள்ளது.

சாரதா என்றும் சரஸ்வதி என்று அழைக்கப்படும் இந்த தெய்வம் தான் காஷ்மீர் பண்டிதர்களின் முதன்மையான தெய்வம்.

பிரபல கர்நாடக சங்கீத வித்வான் முத்துசாமி தீட்சிதர் இந்த சாரதா தெய்வத்தை நினைத்துப் பாடிய கலாவதி கமல்அஸ்னா யுவதி என்ற பாடல் பிரசித்தி பெற்றது. காஷ்மீரில் வாழும் சாரதா என அந்த பாடல் தொடங்குகிறது.

சாரதா பீடத்தை தெற்கே கொண்டு வந்து சேர்த்த பெருமை ஆதிசங்கரரையே சாரும். சாரதா பீடத்தில்தான் அவர் ஞானத்தின் இருக்கையை பெற்றார்.

ஆதிசங்கரரின் முதல் வசனமாக கருதப்படும் பிரபாஞ்ச்ஸர் பாடலை சாரதா தேவியை நினைத்து பாடியுள்ளார்.

தென்னிந்தியாவில் உள்ள சிருங்கேரி சாரதாம்பா கோயிலில் சாரதா தேவியின் உருவம் சந்தன மரத்தில் அமைந்துள்ளது. அதனை இங்கிருந்து சங்கராச்சாரியார் எடுத்துவந்துவிட்டார்.

சுவாமி ராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் இருந்து பிரம்மா சூத்திரங்கள், ஸ்ரீ பாஸ்யா மீது தனது கருத்துரையை எழுதினார்.

அதற்கு முன்பாக, எழுதுவதற்கு முன், பிரம்மா சூத்திரங்களைப் பாதுகாக்கும் வகையில், போதினானின் வித்ருவைப் பற்றிக் குறிப்பிடுவதற்காக எல்லா இடங்களுக்கும் பயணம் செய்தார்.  அதில் சாரதா பீடமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.