ஸ்ரீநகர்:

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பான வதந்திகள் பரவுவதை தடுக்க  போலி கணக்குகளை முடக்க டிவிட்டருக்கு மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. பல போலி சமூக வலைதள கணக்குகள் பாகிஸ்தானால் உருவாக்கப்பட்டு வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அதுபோன்ற கணக்குகளை உடனே நீக்க மத்திய அரசு அறிவுறுத்தியது. அதையடுத்து போலி கணக்குகளை டிவிட்டர் நிர்வாகம் நீக்கி வருகிறது.

ஜம்மு- காஷ்மீருக்கான  சிறப்பு அந்தஸ்து 370 சட்டம் நீக்கப்பட்டதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம்  இரு யூனியன் பிரதேசஙகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அங்கு கடந்த சில நாட்களாக ராணுவக் குவிப்பு, 144 என பதற்றம் நிலவி வந்தது. இடையில் பக்ரீத் பண்டிகைக்காக தடை உத்தரவு நீக்கப்பட்ட நிலையில், பயங்கர வாதிகள் தாக்குதல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக வந்த தகவல்களை தொடர்ந்து, வரும் 15ந்தேதி வரை அங்கு 144 தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் 370 சட்டப்பிரிவு நீக்கம் குறித்து சமூகவலைதளங்களில் சிலர் தேவையற்ற கருத்துகளை பரப்பி வருகின்றனர். இதன் காரணமாக போலி டிவிட்டர் கணக்குகளை முடக்க மத்திய அரசு டிவிட்டர் நிறுவனத்துக்கு கோரிக்கை வைத்தது.

இதைத்தொடர்ந்து, தற்போது வரை  4 போலி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் வதந்திகளை பரப்பி வரும் போலி கணக்குகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், அவைகளும் விரைவில் முடக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.