சென்னை: கரூரில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐ, தவெக தலைவர் விஜய் நாளை (மார்ச் 10) விசாரணைக்கு ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுஉள்ளது. ஏற்கனவே இரண்டுமுறை, டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகி உள்ள நிலையில், மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உளளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் திமுகஅரசின் அவசர நடவடிக்கை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் திருச்சியில் முகாமிட்டி, கரூர் சம்பவம் தொடர்பாக நேரடி ஆய்வு செய்தனர். மேலும் பொதுமக்கள் உள்பட பலரிடம் விசாரித்து ஆவணங்களை சேகரித்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக மிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் 2 முறை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். மேலும் இவ்வழக்கு தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளான புஸ்சி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகளும் சி.பி.ஐ. முன்பு ஆஜராகி உள்ளனர்.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு ள்ளது. இது சலசலப்பை ஏற்படுத்திய உள்ளது.
இதற்கிடையில், விஜய் நாளை பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளதால் அவர் ஆஜராஜ வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜராக அனுமதிக கோரி விஜய் தரப்பு கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
[youtube-feed feed=1]