சென்னை: திமுகவில் இருந்த கருப்பசாமி பாண்டியன், ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
நெல்லை முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன், கருணாநிதியால் மாவட்ட பொறுப்பாளரானார். கருத்து வேறுபாடு காரணமாக, திமுகவில் இருந்து நீக்கப்பட, சில ஆண்டுகள் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.
பின்னர் சசிகலா முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார். அங்கேயும் கருத்து வேற்றுமைகள் எழு, சில காலம் கழித்து, கருணாநிதி மறைவுக்கு பிறகு கருப்பசாமி பாண்டியனை திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் திமுகவில் இணைந்தார்.
தமக்கு கட்சியில் பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்ற குமுறலில் இருந்த அவரை அதிமுக பயன்படுத்தியது. குறிப்பாக நெல்லையை சேர்ந்த சுதா பரமசிவம், அம்பை எம்எல்ஏவான முருகையா பாண்டியன் ஆகியோர் அவரை சந்தித்து அதிமுகவில் சேரும்படி அழைப்பு விடுத்திருந்தனர்.
இதுதொடர்பாக அதிமுக தலைமைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கருப்ப சாமி பாண்டியன் அதிமுகவில் இணையப் போவதாக நெல்லையில் தகவல் கசிந்தது. இந்நிலையில், சென்னை சென்ற கருப்பசாமி பாண்டியன் கட்சியின் பொறுப்பாளரான ஓபிஎஸ் தலைமையில் அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.