சுமிதா ரமேஷ் (Sumitha Ramesh) அவர்களின் முகநூல் விமர்சனம்:
பிரமாண்ட ஏ.எம்.ரத்னம் தயாரிக்க,ரேணிகுண்டா இயக்குனர்,லிங்குசாமி அஸிஸ்டெண்ட் பன்னீர்செல்வம்..இயக்கியது கருப்பன்.
சிவாஜியும்,எம்ஜியாரும் சுவைத்து,கமலும் ரஜினியும் அரைத்ததை.. தானும் ருசித்துத்துப்ப விஜய் சேதுபதி ஆசைப்பட்டதே கருப்பன்.
50’ஸ் ப்ளாட் கதையில்..லேட்டஸ்ட் அட்ராக்ஷன் ஜல்லிக்கட்டு வீரனாக வர , அட என்று நாமும் சுவாரஸ்யம் தேட
முதல் ரெண்டு சீன்களில்.. திருமணம் முதலிரவுகாட்சிவரை..விஜய் சேதுபதி ஏற்படுத்தும்
நிச்சயம் எதாவது ட்விஸ்ட் வித்யாசம் இருக்கும்..என்ற எதிர்பார்ப்பை..தியேட்டரைவிட்டு வரும் வரை எதிர்பார்ப்பில் மட்டுமே வைத்து ஏமாற்றியிருக்கிறார்.
கோவிலாக அண்ணன் பசுபதி..மாறாத அண்ணன் செண்டிமெண்டில் அள்ள,வில்லனாக பாபி சிம்ஹா.. சிறப்பாக நடிக்க..அண்ணியாக காவேரியும்,அம்மாவாக ரேணுகாவும்..யானைபசி சோளப்பொறியாக திரையில் தோன்றுகின்றனர்.
குடித்து..டான்ஸ்..கூத்து என விஜய் சேதுபதியின் ஆசம் ரகளைகள்..அதிகமாகி சற்றே ஜவ்வினை அள்ளிச் சேர்க்கிறது.
அம்மா செண்டிமெண்ட், அறுத பழசான பஞ்சாயத்து..பழிவாங்க துரத்த..மொக்கை டெக்னிக்ஸ் என்று கதைக்கான டிஸ்கஷனில்..முழு டீமே தூங்கியிருப்பது..தியேட்டரின் காலி இருக்கைகள்.. இருப்பதை வெளிச்சத்தில் காண்பிக்கின்றன.
வில்லனில் ஆரம்பித்து அனைவரும் லேட்டஸ்ட் ஸ்மார்ட் போனில் டயலாக் விட ஹீரோ மட்டும்..பழைய நோக்கியா கூட இன்றி வெளியில் போன கணவனுக்காக மனைவியை காக்க வைப்பதும்,
ஊருக்கே இலவசங்களை அள்ளித்தந்த அரசுகளின் ஆட்சியில்..பணக்கார பளபள ஹீரோயின் விறகு அடுப்பில் சமைப்பது என டைரக்டரது அலட்சியங்கள் படு அம்பலம்..
தன்யா..பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் பேத்தி..அழகாக இருக்கிறார்.. சேலையிலும்..பவ்யம்..இறுதிக்காட்சிகளில் நடிக்கக்கற்றுக்கொள்கிறார்..அறிமுகத்தில் அழகு..இயக்குனர் சொன்னதை செய்திருக்கலாம்.
விஜய் சேதுபதி- சிங்கம் புலி காம்போ..கிச்சுகிச்சுமூட்டி நம்மை ரிலாக்ஸ் செய்கிறது.
முழுக்க முழுக்க..தியேட்டர் சீட் நம்மை அமரவைத்துப்பார்க்க..விஜய் சேதுபதி மட்டுமே காரணமாகிறார்,ஆனால்..அதுவும் எப்படி இப்படி ஒரு ஸ்கிரிப்ட் ?! நெக்ஸ்ட் டைம்..நோ சறுக்கல் சாரே ..
இசை இமான்..சில பாடல்கள் கேட்ட பீல் தருகின்றன.. பின்னணியிலும் பாடல்களிலும் அடக்கிவாசிக்கிறார்.