சென்னை,
மைலாப்பூர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதி வரும் வெள்ளிக்கிழமை வீடு திரும்புகிறார் என்று ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
ஒவ்வாமை காரணமாக டிசம்பர் 1ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 7ந்தேதி வீடு திரும்பிய கருணாநிதி கடந்த 15-ஆம் தேதியன்று மூச்சுத் திணறல், தொண்டை மற்றும் நுரையீரலில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக மீண்டும் சென்னையிலுள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது பூரண உடல் பெற்றுள்ள கருணாநிதி டிவி, பத்திரிகைகள் பார்த்து வருவதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் கருணாநிதியின் தற்போதைய புகைப்படத்தை வெளியிட்டது காவேரி மருத்துவமனை.
இந்நிலையில், அவர் வரும் வெள்ளிக்கிழமையன்று, அதாவது டிசம்பர் 23-ம் தேதியன்று வீடு திரும்புவார் என கருணாநிதியின் மகனும், தி.மு.க. பொருளாளருமான  ஸ்டாலின் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.