சென்னை: தமிழக சட்டப்பேரவையில் மறைந்த தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதால், அன்றைய தினம் தலைமைச்செயலக ஊழியர்கள் 1மணியுடன் பணியை நிறைவு செய்ய அறிவிறுத்தப்பட்டு உள்ளது.

தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் கருணாநிதி படம் திறப்பு விழா ஆகஸ்டு 2ந்தேதி மாலை 5 மணிக்கு சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில்  நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக  பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வருகிறார். இதையொட்டி, தலைமைச் செயலக ஊழியர்கள் பகல் 1 மணிக்கு பணி முடித்து வீட்டுக்குசெல்லுமாறு தலைமைச் செயலாளர் இறையன்பு  உத்தரவிட்டு உள்ளார்.

இந்த விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு நூற்றாண்டு விழா மற்றும் கருணாநிதி படம் திறப்பு விழாவை தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட முக்கிய தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.