சென்னை:

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஆந்திர மகிளா சபா அருகில் தமிழக அரசு சார்பில் ரூ.2.80 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

இதில் கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜி சிலை இங்கே அமைக்கப்பட்டுள்ளது.

இதில் இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை மீண்டும் வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் 2 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.