சென்னை: கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, சென்னையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 5-வது ஆண்டு நினைவு தினம் இன்று திமுகவினரால் அனுசரிக்கப்படுகிறது. கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் திமுக தொண்டர்கள் கருணாநிதி உருவப்படத்தை அலங்கரித்து வைத்து, மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் மற்றும் திருவாரூரில் புதியதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் ஆகியவை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும் ஆங்காங்கே அமைந்துள்ள கருணாநிதி சிலைகளும் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு உள்ளது.
இன்று கருணாநிதியின் 5வது நினைவுநாளை முன்னிட்டு, சென்னையில் அமைதிப்பேரணி நடைபெறும் என திமுக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி, இன்று காலை முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
முன்னதாக, முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் சிலை அருகே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து, முதல்வர் தலைமையில், கலைஞர் சிலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடம் வரையில், அமைதி பேரணி தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இப்பேரணியில், அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர். தற்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
இதையொட்டி, மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு கருணாநிதி நினைவு நாளையொட்டி, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை”உங்களை காண காலையில் அணிவகுத்து வருகிறோம்” “உங்களுக்கு சொல்ல ஒரு நல்ல செய்தி கொண்டு வருகிறேன்” “உங்கள் கனவுகளை எல்லாம் நிறைவேற்றி வருகிறோம் என்பதுதான் அந்த செய்தி” “நீங்கள் இருந்து செய்ய வேண்டியதை தான் நான் அமர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்” “2024 தேர்தல் எங்களை எதிர்நோக்கி வந்து கொண்டிருக்கிறது – வழக்கமாய் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தல் அல்ல இது”
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.