சென்னை :

டல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய  திமுக தலைவர் கருணாநிதி,  சமீப நாட்களாக முழுமையான ஓய்வு எடுத்து வருகிறார். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. அறிக்கைகளும் வெளியிடுவதில்லை. கடந்த வருடம்  டிசம்பர் மாதத்துக்குப் பிறகு கட்சியினர் எவரையும் அவர் சந்திக்கவில்லை.


இந்த நிலையில் வரும்  ஜூன் 3 ம் தேதி – அவரது 94 வது பிறந்தநாள் விழா – அன்று, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

இடையில் உடல் நலமின்றி இருந்த கருணாநிதி கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி என்பதால் இதை வழக்கத்தைவிட பிரம்மாண்டமாக கொண்டாட திமுக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த விழா சென்னை, ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்க இருக்கிறது.  விழாவில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களும் கலந்த கொள்ள உள்ளதாகவும் திமுக அமைப்பு செயலாளரும், எம்.பி.,யுமான ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் இந்த வைரவிழா கொண்டாட்டத்தில்  கலந்து கொள்ள பல்வேறு முக்கிய தலைவர்களை சந்தித்து திமுக எம்.பி., கனிமொழி நேரில் அழைப்பு விடுத்து வருகிறார்.

மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கருணாநிதி தங்களைச் சந்திக்க இருப்பதால் திமுகவினர் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.