சென்னை,
டல்நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
கடந்த 15ந்தேதி முதல்  9 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி, சிகிச்சை முடிந்து உடல்நலம் பெற்று இன்று மாலை  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
உடல்நலம் காரணமாக  கடந்த 15 ம் தேதி இரவு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதிக்கு நுரையீரல் தொற்று மற்றும் சளித்தொல்லைக்கான சிகிசிசை தரப்பட்டது. தொடர்ந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சென்னை காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டிரக்யோஸ்டமி என்ற கருவியின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலம் பெற்றுள்ளார்.
கருணாநிதி டிஸ்சார்ஜ் ஆவதை அறிந்த திமுக தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் காவேரி மருத்துவமனை அருகே திரண்டனர்.  தொண்டர்கள் புடைசூழ கருணாநிதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு சென்றார்.
திமுக தொண்டர்கள் அவருக்கு கை காட்டி தங்களின் ஆதரவையும், மகிழ்ச்சியையும் தெரி வித்தனர். வழக்கமாக அவர் செல்லும் காரில்  போலீஸ் பாதுகாப்புடன் கருணாநிதி அழைத்து செல்லப்பட்டார்.
அவர் ஆஸ்பத்திரியி்ல இருந்து கிளம்பும்போது கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, கருணாநிதி மகள் செல்வி, கனிமொழி எம்.பி., முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, முன்னாள் அமைச்சர் வேலு, பொன்முடி, மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் வந்திருந்தனர்.
மாலை 4.50 மணி அளவில் கோபாலபுரம் வீடு சென்றடைந்தார்.