துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் நரேன் அடுத்து தனுஷ் வைத்து புதிய படம் இயக்கவுள்ளார் .
அவர் இயக்கிய மாஃபியா வரும் 21-ஆம் தேதி திரைக்கு வருகிறது . அதேசமயம் அரவிந்த் சுவாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடிப்பில் ‘நரகாசூரன்’ என்ற படத்தை இயக்கினார். இப்படம் சில காரணங்களால் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.
இந்நிலையில், தற்போது இவர் இயக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தனுஷின் 43-வது படத்தை அவர் இயக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இப்படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.