பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைர்ல்கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தவர் பாடகி சுசித்ரா.

வந்த வேகத்தில் போட்டியாளர்களைப் பற்றி வெளியில் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று தன பார்வையில் இருக்கும் கருத்தை மட்டும் கூறி பரபரப்பு உண்டாக்கினார்.

வீட்டில் யாரும் இவரிடம் இவ்வளவு நாள் ஆகியும் ஜெல் ஆக முடியவில்லை . ஆனால் இவர் பாலாவிடம் மட்டும் நட்பாக இருப்பது அங்கே பிக்பாஸ் வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை . இன்னும் ஒரு படி மேலே போய் சொல்லவேண்டுமானால் ஷிவானிக்கு பிடிக்கவில்லை.

இந்நிலையில் சுசித்ராவின் முன்னாள் கணவரான நடிகர் கார்த்திக்கிடம் ரசிகர் ஒருவர் இப்போ பிக்பாஸ் மீம்ஸ் பார்க்கும்போது ரொம்ப ஹாப்பியா இருக்கீங்களா’ என்று கிண்டலாக கேட்டார். அதற்கு பதிலளித்த அவர் “என்னுடைய முன்னாள் மனைவியைப் பற்றி நான் எப்போதும் உயர்வாக நினைத்து, பாசமாக தான் இருக்கிறேன். உங்கள் யாருக்கும் அவரைப்பற்றி தெரியாது. தெரிந்தது போல் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறியுள்ளார்.