‘பருத்திவீரன்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான கார்த்தி, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘பையா’, ‘மெட்ராஸ்’,‘காற்று வெளியிடை’, உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரானார்.
நேற்று அவருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்திருப்பதாக செய்திகள் வெளியாயின .


இதை தனது ட்விட்டரில் பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் கார்த்தி, “எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. வாழ்வை மாற்றும் அனுபவத்தின் மூலம் எங்களை அழைத்துச் சென்ற எங்களுடைய மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நன்றி தெரிவிப்பது மட்டும் போதுமானது அல்ல. பிறந்த குழந்தைக்கு உங்கள் அனைவருடைய வாழ்த்துகளும் தேவை. நன்றி..” என்று கூறியுள்ளார்.