கர்நாடக கலவரம்: காங். சித்தராமையாவை கவிழ்க்க சதி?

download

பெங்களூருவில் வசிக்கும் நம்ம தோஸ்துகளில்  ஒருவர் சொன்னது:

கர்நாடக வரலாற்றிலேயே மிக மோசமானது 1991 கலவரமாகும். அதில் 28 பேர் மரணமடைந்தனர். கிட்டதட்ட 19 கோடி பொருள் இழப்பு ஏற்பட்டது. பல தமிழ் குடும்பங்கள் கர்நாடகாவை விட்டு தப்பி தமிழகத்துக்கு வந்தனர். 1991-க்குப் பிறகு சிறு சிறு கலவரங்கள் நடந்திருந்தாலும் இந்த ஆண்டு நடந்த கலவரமே அவற்றில் மோசமானதாகக் கருதப்படுகிறது.

25 ஆண்டுகளுக்குப்  பிறகு மறுபடியும் அதே போல திரும்பி வந்திருக்கும் பெங்களூரு கலவரம் காவி சக்திகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்ற தகவல் உளவுத்துறை மூலம் கர்நாடக அரசுக்கு  கிடைத்தது.

dc-cover-mps8rqet2k7djfh7jtaduvmdn2-20160911064849-medi

 

இந்த திட்டமிட்ட கலவரத்தின்மூலம் ஒரே கல்லில் இரு மாங்காய்களை அந்த காவி சக்திகள் அடிக்க முற்பட்டதாகத் தெரிகிறது. முதலாவதாக கலவரம் மூலம் கர்நாடகாவின் தண்ணீர் பிரச்சனையை தேசிய அரங்கில் உரக்க ஒலிக்கும்படி செய்து ஒட்டு மொத்த இந்தியாவின் கவனத்தையும்  ஈர்ப்பது.  இரண்டாவதாக சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி சித்தாராமையாவின் அரசைக் கவிழ்ப்பது.

ஆக, இது தற்செயலாக நடந்த கலவரம் அல்ல என்பது தெளிவாகிறது. இந்தத் தகவல் தெரிந்தவுடன் கர்நாடக அரசு விரைவாக செயல்பட்டு செப்டம்பர் 8,9 தேதிகளில் 596 சமூக விரோதிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதுசெய்து சிறையில்  அடைத்தது. அவர்கள் மட்டும் வெளியே நடமாடி இருந்தால் நிலைமை இன்னும் பல மடங்கு மோசமாகி இருந்திருக்கும். பல உயிர்ச்சேதங்களும், பொருட்சேதங்களும் நிகழ்ந்திருக்கும்.

# அவர் சொன்னதைக் கேட்ட நான், “கலவரத்தில் காவிகளின் பங்குதான் மிக முக்கியமானது என்பது உளவுத்துறை சொல்லித்தான் தெரிய வேண்டுமா.. கலவர காட்சிகளை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானதே. அந்த வன்முறையாளர்களின் தோளில் இருந்த காவி துண்டுகளைப் பார்த்தவுடனே தெரிந்துவிட்டதே!” என்றேன்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: cong, plot, Riots, roundsboy, Siddaramaiah, Topple, கர்நாடக கலவரம்: காங். சித்தராமையாவை கவிழ்க்க சதி? Karnataka, கர்நாடகா, கலவரம், கவிழ்ப்பு, காங்கிரஸ், சதி, ரவுண்ட்ஸ்பாய்
-=-