சசிகலா பரோல் மனு தள்ளுபடி

பெங்களூரு: சசிகலா பரோல் மனுவை பெங்களூரு கர்நாடக சிறைத்துறை தள்ளுபடி செய்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கணவர் நடராஜன் உடல் நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கணவரை பார்க்க சசிகலா 15 நாள் பரோலில் செல்ல கர்நாடக சிறைத்துறையிடம் அனுமதி கோரி இருந்தார். அவரது மனு குறித்து சிறைத்துறை பரிசீலனை செய்தது. மனுவில் பரோலில் செல்வதற்கான போதுமான தகவல் இல்லை எனக் கூறி, கர்நாடக சிறைத்துறை மனுவை நிராகரித்தது. மேலும் கூடுதல் தகவல்களுடன் புதிய மனுவை தாக்கல் செய்ய சிறைத்துறை தெரிவித்துள்ளது.
English Summary
Karnataka Prisons dept rejects deposed AIADMK leader V.K.Sasikala’s parole application to visit her ailing husband