கர்நாடக அமைச்சர் ஷிவால்லி மாரடைப்பால் மரணம்

Must read

ஹுப்பள்ளி

ர்நாடக மாநில நகரசபை அமைச்சர் சி எஸ் ஷிவால்லி மரணம் அடைந்தார்.

கர்நாடக மாநில நகரசபை அமைச்சர் சி எஸ் ஷிவால்லி.   இவர்  தார்வாத் பகுதியில் நடந்த ஒரு கட்டிட விபத்தை பார்வை இட சென்றுள்ளார்.  அப்போது அவருக்கு மிகவும் களைப்பும் சோர்வும் உளதாக தெரிவித்துள்ளார்.   அத்துடன் அவருக்கு இருமல் உள்ளிட்ட பிரச்சினைகளும் இருந்துள்ளன.

அவர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.   அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அருண்குமார்.  அவருக்கு மேலும் சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறி உள்ளார். அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அதை ஒட்டி அவர் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.   அவர் வரும் போதே மிகவும் மூச்சுத் திணறலுடன் வந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.   அங்கு வந்த ஒரு சில நிமிடங்களில் ஷிவால்லி மரணம் அடைந்தார்.

தக்வல் அறிந்ததும் அவருடைய ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் மருத்துவமனை முன்பு கூடி உள்ளனர்.  அவர்களை கட்டுப்படுத்த பலத்த காவல் போடப்பட்டுள்ளது.  சுமார் 57 வயதாகும் ஷிவால்லிக்கு மனைவி மற்றும் இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

More articles

Latest article