பெங்களூரு

ர்நாடக உயர்நீதிமன்றம் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு ரூ.10000 அபராதம் விதித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2022-ம் ஆண்டு பாஜக ஆட்சியின் போது, ஒப்பந்ததாரராக இருந்த சந்தோஷ் பாட்டீல் என்பவர் உடுப்பியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் உயிரிழந்தார். முன்னாள் ஊரக வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த கே. எஸ். ஈஸ்வரப்பாவுக்கும் இவரது மரணத்திற்கும் தொடர்பு இருப்பதாகப் புகார் எழுந்தது.

அவரை கைது செய்ய வலியுறுத்தி அப்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மையின் இல்லத்தை நோக்கி சட்டவிரோதமாகப் போராட்டம் நடத்தப்பட்டது.  போராட்டத்தில் தற்போதைய முதல்வர் சித்தராமையா, உள்கட்டமைப்பு வளர்ச்சித்துறை  அமைச்சர்  எம்.பி.பாட்டீல், காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் கலந்துகொண்டனர். போராட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்ததாகக் கூறி அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு இன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்ஷித் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார்., முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுக்குக் கர்நாடக உயர்நீதிமன்றம் தலா ரூ.10,000 அபராதம் விதித்து, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.

அதாவது கர்நாடக முதல்வர் சித்தரா மையா மார்ச் 6ம் தேதியும், போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி மார்ச் 7ம் தேதியும், காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா மார்ச் 11ம் தேதியும், உள்கட்டமைப்பு வளர்ச்சித்துறை அமைச்சர் பாட்டீல் மார்ச் 15ம் தேதியும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.