கர்நாடக தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்றார் பாஜக கே.ஜி.போபையா

கர்நாடக தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போபையாவுக்கு கவர்னர் பதவி பிரமாணம்

பெங்களூரு:

ச்சநீதி மன்ற தீர்ப்பை தொடர்ந்து கர்நாடகாவில் நிலவி வரும் பரபரப்பான  அரசியல்  சூழ்நிலையில்,  நாளை காலை 11 மணிக்கு சட்டமன்ற கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாளை நடைபெற உள்ள கூட்டத்தின்போது, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க சபாநாயகர் தேவைப்படுவதால், பாஜகவை சேர்ந்த கே.ஜி.போபையா என்ற மூத்த சட்டமன்ற உறுப்பினரை, தற்காலிக சபாநாயகராக  கவர்னர் வஜுபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இன்று மாலை கவர்னர் மாளிகையில் எளிமையாக இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நாளைய சட்டமன்ற நிகழ்ச்சிகளை போபையா நடத்தி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைப்பார். அதைத்தொடர்ந்து எடியூரப்பாவின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தையும், அதைத் தொடர்ந்து, எடியூரப்பாவுக்கு ஆதரவு இருக்கிறதா என்பதை  வாக்கெடுப்பு மூலம் நடத்தி முடிவு அறிவிப்பார்.

Tags: Karnataka Governor appoints BJP MLA KG Bopaiah as pro-tem speaker ahead of floor test tomorrow., கர்நாடக தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்றார் பாஜக கே.ஜி.போபையா