பெங்களூரு:

ர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சி எம்எல்ஏக்கள் 14 பேர் ராஜினாமா செய்துள்ள தால், ஆட்சி கவிழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமாவுக்கு துணைமுதல்வர் பரமேஸ்வரா காரணம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ், ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நித்திய கண்டம் பூரண ஆயுசு போன்ற நிலையில் தத்தளித்து வருகிறது. ஏற்கனவே 14 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், தற்போதுசுயேட்சை எம்.எல்.ஏ நாகேஷ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கூட்டணி ஆட்சிமீது அதிருப்தியில் இருந்த  சுயேட்சை எம்.எல்.ஏ நாகேஷ்க்கு ஆளும் கட்சி அமைச்சர் பதவி கொடுத்து அமைதி படுத்திவைத்திருந்தது. இந்த நிலையில், தற்போது,  ‘ கர்நாடகாவில் அமைச்சர் பதவியிலிருந்து சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ் ராஜினாமா செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், ஆட்சிக்கு ஏற்பட்ட நெருக்கடியை சமாளிப்பது குறித்து காங்கிரஸ் தலைவர்க ளுடன் முதலமைச்சர் குமாரசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.  பதவி விலகிய 13 எம்.எல்.ஏ. க்களின் ராஜினாமா குடித்து சபாநாயகர் முடிவெடுக்கும் முன்பு,, அதிருப்தி எம்எல்ஏக்களின் “தனிப்பட்ட மனக்குறை” தீர்க்கப்படக்கூடும் என்று காங்கிரஸ் கெட்சி தெரிவித்துள்ளது.

தற்போது ராஜினாமா செய்துள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முன்னாள் முதல்வர் சித்தராம யா வின் தீவிர ஆதரவாளர்கள்.  இவர்களுக்கும், முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவரும், தற்போதைய துணைமுதல்வருமான இடையேயான கருத்து வேறுபாடு காரணமாகவே அவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள்  எஸ்.டி. சோமாஷேகர், பைரதி பசவராஜு, என் முனிரத்னா மற்றும் ராமலிங்க ரெட்டி ஆகியோர் கூட்டணி அரசாங்கத்தை நடத்துவதில் உண்மையான பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றும், பெங்களூரு மேம்பாட்டு இலாகாவை வைத்திருக்கும் துணை முதல்வர் ஜி.பரேமேஸ்வராவுடன் ஏற்பட்ட தனிப்பட்ட வேறுபாடுகளாலேயே அவர்கள் ராஜினாமா செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கருத்து தெரிவித்து  காங்கிரஸ் தொழிலாளர்கள் கட்சி மற்றும் சி.எல்.பி தலைவர்,  சித்தராமையா மீதான விசுவாசத்தை கருத்தில் கொண்டு இந்த நால்வரும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக மிரட்டி உள்ளனர் என்று தெரிவித்து உள்ளார்.

இந்த 4 அதிருப்தியாளர்களின்  பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால்,  அவர்கள் ஓரிரு நாட்களில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்ஊகு  திரும்பலாம்” என்று ஒரு காங்கிரஸ் தலைவர் ஒரு தெரிவித்து உள்ளார்.

தற்போது அதிருப்தி  எம்எல்ஏக்கள் அனைவரும் காங்கிரஸ் எம்எல்ஏவான  ராமலிங்க ரெட்டியின் கண்காணிப்பில் மும்பையில் தங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இவர், பரமேஸ்வராவுக்கு எதிராக காய் நகர்த்தி வரும் நிலையில், துணைமுதல்வர் பதவிக்கு அடிபோடுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, ராமலிங்க ரெட்டிக்கு துணைமுதல்வர் பதவி வழங்கப்பட்டால், தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு முடிவு வரும் என்றும் பெங்களூரில் இருந்த  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ராமலிங்க ரெட்டிக்கு துணை முதலமைச்சர் பதவியைக் கொடுத்து சமாதானப்படுத்துமாறு காங்கிரசுக்கு குமாரசாமி அறிவுறுத்தியுள்ளார் . அதே போன்று மும்பை ஓட்டலில் தங்கியிருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை அழைத்து அவர்களை சமதாதானப்படுத்த முயற்சிக்குமாறு சித்தராமையாவிடம் குமாரசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

நிலைமை மோசமடைந்து வருவதால், 9ம் தேதி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், காங்கிரஸ் தரப்பில் மேலும் 5 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக பாஜகவினர் பரபரப்பு தகவல்களை தெரிவித்து உள்ளனர்.

இப்பிரச்சினை குறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, கர்நாடகாவில் இடைத் தேர்தல் வர விடமாட்டோம் என்று கூறினார். பாஜகவில் உள்ள சில எம்.எல்.ஏக்களை இழுப்பதற்கும் காங்கிரஸ் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

கர்நாடக அரசியலில் ஏற்பட்டுள் ள பிரச்சினையால் 12ம் தேதி தொடங்க உள்ள சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரை ஒத்தி வைக்குமாறு சபாநாயகரை முதலமைச்சர் குமாரசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

ராஜினாமா கொடுத்துள்ள எம்எல்ஏக்களின் கடிதம் மீது, சபாநாயகர் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.