பெங்களூரு

ர்நாடக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் ராஜினாமா செய்த எம் எல் ஏக்களை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள்.

கர்நாடக மாநிலத்தில் மஜத மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிற்து. மஜத வின் குமாரசாமி முதல்வராகவும் காங்கிரஸின் பரமேஸ்வரா துணை முதல்வராகவும் பதவி வகித்து வருகின்றனர். கர்நாடக காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் 14 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா மும்பையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் அனைத்து காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களும் கட்சியிடம் விசுவாசமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தாம் மும்பையில் இருந்தாலும் அவர்களுடன் தொடர்பில் உள்ளதாகவும் கூறி உள்ளார்.

இந்நிலையில் இன்று பெங்களூருவில் அமைந்துள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் கூடி போராட்டம் நடத்தி உள்ளனர். ராஜினாமா கடிதம் அளித்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற வேண்டும் என அந்த தொண்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.