பெங்களூரு

ர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நாடெங்கும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இது மூன்றாம் அலை பரவல் என அஞ்சப்படுகிறது.   இம்முறை பல அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலதரப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட  பல அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  திரையுலகில் மகேஷ்பாபு, கரீனா கபூர், வடிவேலு, இசை அமைப்பாளர் தமன், குஷ்பு உள்ளிட்ட பலர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதையொட்டி அவர் தனது வீட்டில் தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]