கர்நாடகாவைக் கண்டித்து தமிழகத்தில் முழு அடைப்பு துவங்கியது: ஒரு லட்சம் போலீசார் குவிப்பு: இயல்பு வாழ்க்கை பாதிக்கும்

Must read

சென்னை:
காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தும்  தமிழகம் மற்றும் புதுவையில் முழு அடைப்பு போராட்டம்  இன்று காலை ஆறு மணிக்கு துவங்கியது.
அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்ட இன்றைய முழு அடைப்பிற்கு அனைத்து எதிர்க்கட்சிகள் மற்றும் வணிகர் சங்கங்கள், ஆம்னி பஸ் உரிமையாளர்கள், பெட்ரோல் பங்குகள் உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினர் ஆதரவு அளித்துள்ளனர் இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கும்.
வணிகர் சங்க பேரவை, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கடை அடைப்பு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை
ரயில் மறியல் போராட்டங்கள் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நடைபெற உள்ளன.
b
நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பான தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று முன்தினம்  இந்த கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் தலைவர் வேல்முருகன், தமிழக அரசு இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
பேருந்துகள் பெரும்பாலும் ஓடாது என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும்  காவல்துறை பாதுகாப்புடன் தற்போது  சில அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.a
இன்றைய போராட்டங்களின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

More articles

1 COMMENT

Latest article