பெங்களூரு: கர்நாடகத்தில் பி.யூ.சி.2-ம் ஆண்டு பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி உள்ள நிலையில், ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பான பல்வேறு வழிகாட்டுதல்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நீதிமன்றமும், கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது என்று தீர்ப்பளித்தது. அதைத்தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வரும் மாணவிகள் திரும்பி அனுப்பப்பட்ட வருகின்றன. இதையடுத்து, இன்று பியுஜி 2வது ஆண்டு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், ஹிஜாப் தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி,  கர்நாடக 2வது PUC தேர்வு 2022க்கான தேர்வு மையங்களுக்கு ஆடைக் குறியீடு விதிமுறைகளின்படி ஹிஜாப் அல்லது பிற மத அடையாளங்களை அணிந்து வருபவர்கள்  தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு எழுதும்போது மாணவர்கள் அந்தந்த கல்லூரி வளர்ச்சி குழுக்களால் நிர்ணயிக்கப்பட்ட சீருடையை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இன்று தொடங்கும் பியுசி 2ம் ஆண்டு பொதுத்தேர்வு வருகிற மே மாதம் 18-ந் தேதி இந்த தேர்வு நிறைவடைகிறது.  இந்த தேர்வை  மாநிலம் முழுவதும் 6,84,255 மாணாக்கர்கள் எழுத உள்ளனர். இதில், 3,46,936 பேர் ஆண்கள், 3,37,319 பேர் பெண்கள்.  தேர்வுக்காக மாநில முழுகூவதும்  1,076 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  தேர்வு மையங்களை சுற்றிலும் 200 மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  ல பதற்றமான தேர்வு மையங்களில் அதிக போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்வு நடைபெறும் நாட்களில் மாணவர்கள் தங்களின் நுழைவு சீட்டை காண்பிடித்து அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு தினமும் காலை 10.15 மணிக்கு தொடங்கி 1.30 மணி வரை நடை பெறும்.

முறைகேடுகளை தடுக்க 3,074 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களை சுற்றிலும் உள்ள ஜெராக்ஸ் கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கேள்வித்தாள் கசியாமல் இருக்க அனைத்து மாவட்ட கருவூலங்களிலும் பலத்த போலீஸ: பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. அங்கு 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தேர்வு மையங்களில் ஒரு மேசையில் 2 மாணவர்கள் அமர வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேர்வு எண் அந்த மேசையில் எழுதப்பட்டுள்ளன. இன்று காலையில் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வந்ததும், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள எண் எழுதப்பட்டுள்ள இடத்தில் அமர வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை கேட்டு கொண்டுள்ளது.

தேர்வு மையங்களில் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தோ்வு மைய தலைமை மேற்பார்வைாளர் கேமரா வசதி இல்லாத சாதாரண செல்போன் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.