இந்தி நடிகை கரீனா கபூருக்கு மும்பையில் உள்ள பிரீச் கேன்டி ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.
கடந்த 2012ம் ஆண்டு கரீனா கபூர் நடிகர் சைஃப் அலி கானை காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து படத்தில் நடித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அவர் கர்ப்பமானதைத் தொடர்ந்து படத்தில் நடிப்பதை நிருத்தினார்.
நிறை மாத கர்ப்பமாக இருந்த அவரை பிரசவத்துக்காக மும்பை பிரீச் கேன்டி ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு ‘தைமர் அலி கான்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel