இயக்குனர் விஜயசந்தர் ‘வாலு’ படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சிமா மோகன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் தற்போது இப்படத்தின் கதாநாயகியாக ‘சாய் பல்லவி’ ஒப்பந்தமாகியுள்ளார். மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. தொடர்ந்து மலையாளத்தில் ‘கலி’ என்ற படத்தில் நடித்தார். தற்போது தமிழில் விக்ரமிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.
முன்னதாக விக்ரம் வயதில் மூத்தவராக இருப்பதால் சாய் பல்லவி நடிக்க மறுத்ததாக செய்திகள் வெளியானது குறிப்பிடதக்கது.