பி.வாசு இயக்கத்தில் ஆர்.ரவிந்திரன் தயாரிக்கும் படம் ‘சிவலிங்கா’. இப்படத்தின் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். லாரன்ஸுக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார். காமெடி கதாப்பத்திரத்தில் நடிகர் வடிவேலு நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற டிசம்பர் 25ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.