காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மரணம் அடைந்ததால் கன்னியாகுமரி தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.


முன்பு நாகர்கோயில் தொகுதியாக இருந்த கன்னியாகுமரி தொகுதி , காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகும்.
1999 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் நடந்த இரு தேர்தல்களில் மட்டும் இங்கு பா.ஜ.க. வென்றுள்ளது.
எஞ்சிய அனைத்து தேர்தல்களிலும் காங்கிரஸ் அல்லது காங்கிரஸ் ஆதரவு பெற்ற கட்சிகளே கன்னியாகுமரியில் வென்றுள்ளன.
கடைசியாக கன்னியாகுமரி ( நாகர்கோயில்) தொகுதியில் கடந்த 1969 ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது.
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர்- பெருந்தலைவர் காமராஜர்.

தி.மு.க. ஆதரவுடன் போட்டியிட்ட சுதந்திரா கட்சியின் வேட்பாளர் மத்தியாசை காமராஜர் சுமார் ஒரு லட்சத்து 28 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இரு ஆண்டுகளுக்கு முன்பு ( 1967) காமராஜர் விருதுநகர் சட்டசபை தொகுதியில் தோற்றிருந்தார்.
இதனால் , அப்போது நடந்த கன்னியாகுமரி இடைத்தேர்தலில் அனல் பறக்கும் வகையில் பிரச்சாரம் நடைபெற்றது.

-பா.பாரதி.