கந்தசஷ்டி: திருச்செந்தூரில் நாளை விழா தொடக்கம்!

 

திருச்செந்தூர்,

றுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் வருடாந்திர கந்த சஷ்டி விழா நாளை தொடங்குகிறது.

நாளை (20ந்தேதி) தொடங்கும் இந்த விழா 26ந்தேதி வரை ஒரு வாரம் நடைபெறுகிறது.

உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இருந்தாலும், அறுபடை வீடுகளிலேயே இரண்டாம் வீடான  திருச்செந்தூரில்தான் கந்தசஷ்டி விழா வெகு கோலாகலமாக நடைபெறும்.

இந்த விழாவில் பங்குபெற உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து விரதம் இருந்து பக்தி பரவசத்துடன் வந்துகொள்வார்கள்.

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா தொடர்பாக நாளை காலை  6 மணிக்கு யாகசாலையில் அருள்மிகு ஜெயந்திநாதர் எழுந்தருள்கிறார். தொடர்ந்து யாகசாலை பூஜை தொடங்குகிறது.

நாளை மறுதினம்  21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்படும். 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடைபெறும்.

அக்.25-ம் தேதி மாலை 4.30 மணிக்குமேல் கடற்கரையில் வெகு விமரிசையாக  சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும்.  இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்

அதையடுத்து இறுதி நாளான 26-ம் தேதி அதிகாலை 5 மணியளவில் அம்பாள் தபசு காட்சிக்கு புறப்பாடு, மாலை 6.30 மணிக்கு சுவாமி, அம்பாள் மாலை மாற்று விழாவும், இரவு திருக்கல்யாண வைபவமும் நடைபெறும்.

விழா நாட்களான ஒரு வாரமும் திருக்கோயில் கலையரங்கில் காலை, மாலை சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெறும்.

 

கந்த சஷ்டி: விரத முறைகளும், பலன்களும்…

https://patrikai.com/kantha-sashti-fasting-methods-benefits/
English Summary
Kanthashasti festival begins tomorrow  in Thiruchendur