
கான்பூர்:
கான்பூரில் உள்ள குளிர்பதன சேமிப்பு கிடங்கு வெடித்து சிதறி இடிபாடுகளுக்குள் 25 பேர் சிக்கி கொண்டனர்.
உத்தரபிரதேசம் மாநிலம், கான்பூரில் உள்ள சிவ்ராஜ்பூர் என்ற இடத்தில் குளிர்பதன சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகின்றது.
இங்கு பழங்கள், காய்கறிகள், போன்ற பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு வருகின்றன.
இன்று, மதியம் இங்கு அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதால், வெடிவிபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த கிடங்கு முற்றிலும் இடிந்து நொறுங்கியது.
இந்த கிடங்கில் பணியில் இருந்த 25 பேரின் நிலைமை என்ன என்று தெரியவில்லை. அவர்களை மீட்கும் பணியில் மீட்பு பணியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel