ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக தேவாங் மோடி நியமனம்!

முகேஷ் அம்பானியுடன் தேவாங் மோடி

மும்பை

னில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் சிஇஓவாக தேவாங் மோடி பதவி ஏற்றுள்ளார்.

அம்பானி சகோதரர்களுல் ஒருவரான அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்தின் கீழ் பல நிறுவனங்கள் இயங்கி வருகிறது.

இதில், இன்சூரன்ஸ், நிதி சேவை நிறுவனமான ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் சிஇஓவாக இருந்த சாம் கோஷ் தனது பதவியை சில நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார்.

அதையடுத்து புதிய சிஇஓவாக தேவாங் மோடி புதிய தலைமை நிர்வாக அதிகாரி யாக பதவி ஏற்றுள்ளார்.

ரிலையன்ஸ் குருப்பின் கீழ் இயங்கும் வர்த்தக பிரிவு நிறுவனமே ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனமாகும்.

அதன் சிஇஒவாக தேவாங் மோடி பதவி ஏற்றுள்ளார்.

இவர் இதற்கு முன்பாக பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத் தின் நுகர்வோர் பிரிவின் வர்த்தக தலைவராக இருந்தார் என்றும், பஜாஜ் பைனான்சின் வர்த்தக விரிவாக்கத்துக்கு மோடியின் திறமையே காரணம் என்று கூறப்படுகிறது.

44 வயதாகும் தேவாங் மோடிக்கு நிதித் துறையில் சுமார் 20 வருட அனுபவம் உள்ளவர் குறிப்பிடத்தக்கது.


English Summary
reliance commercial finance appoints devang modi as ceo