ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் காங்கிரஸூம் தேசிய மாநாட்டுக் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. ஜம்மு-காஷ்மீர்மாநிலத்தில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணியிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள ஸ்ரீநகர் மற்றும் அனந்தநாக் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 9 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

அனந்த்நாக் தொகுதியில் மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் முதலமைச்சர் மெக்பூபா முப்தியின் சகோதரர் முப்தி ஹூசைனும்,  இதேபோல் ஸ்ரீநகர் நாடாளுமன்றத்துக்கு நசீர் அகமதுகானும்   வேட்பாளர்களாக  நிறுத்தப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் மக்கள்ஜனநாயககட்சி மற்றும் பாஜக கூட்டணி அம்மாநிலத்திலிருந்து  துடைத்தெறியப்பட வேண்டும் என்பதற்காக  காங்கிரஸூம், தேசிய மாநாட்டுக் கட்சியும் இணைந்துள்ளன.

வரும் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அனந்த்நாக் தொகுதியிலிருந்து காங்கிரஸ் வேட்பாளரும், ஸ்ரீநகர் தொகுதியிலிருந்து தங்கள் கட்சி வேட்பாளரும் போட்டியிடுவார்கள் என தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா இன்று கூறினார்.

 

.