21ந்தேதி: சுஷ்மாவுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் பேச்சுவார்த்தை!

டில்லி,

டந்த 6ந்தேதி இரவு நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஷ்வரம் அருகே உள்ள தங்கச்சி மடத்தை சேர்ந்த இளைஞர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப் பட்டார்.

அதையடுத்து, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள்  இறந்த பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்தும்,  இனிமேல் இதுபோல் ஒரு சம்பவம் நடைபெறக்கூடாது என்றும், மத்திய அமைச்சர் நேரில் வந்து உத்தரவாதம் அளிக்க வேண்டும் காலவரையற்ற போராட்டம் நடத்தினர்.

அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் மீனவர்கள் போராட்டம் தொடர்ந்தது.

இதற்கிடையில், மீனவர் போராட்டத்தை கைவிடும்படி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்கச்சி மடம் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களி டையே பேச்சு வார்த்தை நடத்தினர்.

மத்தியஅரசு உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டு, பிரிட்ஜோவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து வரும் 21ந்தேதி மத்திய வெளியுறவுத்த துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் விரைவில்  டில்லி செல்ல இருக்கிறார்கள்.


English Summary
21th April: Sushma meets with the Rameswaram fishermen!