(மாதிரி படம்)

டில்லி:

னிஷ்க் நகை கடை நிறுவனம் ரூ.824 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பதாக ஸ்டேட் வங்கி சிபிஐ-ல் புகார் கூறி உள்ளது.

கனிஷ்க் என்ற  தனியார் நகைக் கடை உரிமையாளர் புபேஷ்குமார் ஜெயின், நிறுவனத்திற்காக  ரூ.824 கோடி அளவுக்கு கடன் வாங்கி இருப்பதாகவும், அதை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் எஸ்பிஐ சார்பில், சிபிஐயிடம் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டில்லியில் உள்ள சிபிஐ இணை இயக்குநருக்கு பாரத ஸ்டேட் வங்கி சார்பில் கொடுக்கப்பட்டுள்ள புகார் கடிதத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்குகளில் இருப்பு இருப்பதாக போலியாக கணக்குகளை சமர்ப்பித்து, கனிஷ்க் நகை  நிறுவனம்  வங்கிகளிடம் இருந்து கோடி கணக்கில்  கடன் பெற்றதாகவும்,  சென்னை  ராஜாஜி சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையில் மட்டும் கனிஷ்க் கோல்டு நிறுவனம் பெயரில் ரூ.175 கோடி அளவுக்குக் கடன் பெறப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை அந்த நிறுவனம்  அசல் மற்றும் வட்டியை  செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளதாகவும், மேலும் பேங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, ஐடிபிஐ, யூகோ வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா உள்பட 14 வங்கிகளிடம் இருந்து ரூ.824 கோடியே 15 லட்ச ரூபாயை கடனாகப் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அதிகமான தங்க இருப்பைக் காட்டி 13 வங்கிகளில் கோடிக்கணக்கில் அது கடன் பெற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.