சென்னை

மத்திய அரசு இதுவரை வெள்ள நிவாரணத்துக்காகத் தமிழகத்துக்கு ஒரு பைசா கூட தரவில்லை என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

தி.மு.க. எம்.பி. கனிமொழி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர்,

“இதுவரை பாஜக தனது தேர்தல் வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை. யாருக்கும் 15 லட்சம் ரூபாய் வந்து சேரவில்லை.  அவர்கள் விவசாயிகளுக்கு அவர்கள் தருவதாகச் சொன்ன தொகை குறைந்து கொண்டே வருகிறது.  மேலும் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியும் குறைந்து வருகிறது. 

பாஜக மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றினாலும் அது எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பது தெரியவில்லை. தமிழகத்தின் பல மாவட்டங்கள் மழை வெள்ளம் காரணமாக மோசமாகப் பாதிக்கப்பட்டன. மக்களுக்கான நிவாரணங்கள் அனைத்தையும் தமிழக முதல்வர்தான் தந்து கொண்டிருக்கிறார். 

மத்திய அரசு சார்பில் 2 மூத்த அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருகை தந்து வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டுச் சென்றனரே தவிர வெள்ள பாதிப்பு நிவாரணத்திற்காக மத்திய அரசு இதுவரை தமிழகத்திற்கு ஒரு பைசா கூட தரவில்லை.மத்திய அரசு  தமிழகத்திற்கு எதையுமே செய்யக்கூடாது என்ற மனநிலையில் மத்திய அரசு இருக்கிறது.” 

என்று கூறி உள்ளார்.