சென்னை:  வளசரவாக்கம் பகுதியில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தின்போது, பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசாரிடம் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் பாலியல் சேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. திமுக இளைஞரணி நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

திமுக பெண்கள் அணி தலைவரான, திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில்  இந்த பாலியல் சேட்டை நடைபெற்றுள்ளது. இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது பெண் காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் பிரச்சினைகளில் ஈடுபடுபவர்களை இரும்புகரம் கொண்டு அடக்கும்வோம் என்று கூறிய தமிழக முதல்வர் ஸ்டாலின், போலீசாரிடமே அத்துமீறி திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பது பெண் போலீசாரிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தசரதபுரம் பேருந்து நிறுத்தத்தில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புத்தாண்டான நேற்று (ஜன.1) நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்த பின் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 22 வயது பெண் காவலரிடம் 2 இளைஞர்கள் பாலியல் சேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை அந்த பெண் காவலர் தடுத்து அத்துமீறி உள்ளனர். இதனால், அந்த பெண் போலீசார் கதறி அழுந்துள்ளார். இதை கண்ட  சக போலீசார், அநத் இரு இளைஞர்களை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் இருவரும் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் என்பதும், ஒருவர் சாலிகிராமத்தை சேர்ந்த பிரவீன் (23), மற்றொருவர் சின்மயா நகரை சேர்ந்த ஏகாம்பரம் (23) என்பதும், தெரியவந்தது.

திமுக இளைஞர் அணி நிர்வாகளே இதுபோன்ற பாலியல் சேட்டையில் ஈடுபட்டதை கண்ட காவல்துறையினர் அதிர்ச்சியில் உறைந்ததிருக்க, அங்கு வந்த திமுக எம்எல்ஏ பிரபாகரன் ராஜா (வியாபாரி சங்க தலைவர் விக்கிரமராஜாவின் மகன்)  மற்றும் திமுக நிர்வாகிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அந்த இரண்டு பேரையும், அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதனால், அவர்களை கைது செய்யாமல், காவல்துறையினர் சென்றுள்ளனர்.

இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் காவலர், அவர்கள்மீது வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் எடுத்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், இதுவரை புகாரை பதிவு செய்யாமல் கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாக கூறப்படுகிறது. இரு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள மாநில பாஜக தலைவர் அண்ணாமலை,  பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள் 2 பேரை கைது செய்ய வேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளார்.

இதுக்குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், சென்னை விருகம்பாக்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரை இரண்டு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அவர்களை கைது செய்ய முற்பட்ட காவல்துறையினரிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உச்சகட்ட அவலம். மேடைகளில் பெண்களை ஆபாசமாக பேசுவது திமுக வுக்கு வாடிக்கையாக இருந்தாலும், திமுக பாராளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி எம்.பி . அவர்கள் பங்கேற்ற பொதுக் கூட்டத்திலும் இவ்வாறு திமுக நிர்வாகிகள் நடந்து கொண்டது அதிகார மமதையின் வெளிப்பாடாகவே தெரிகிறது. இந்த பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு திமுக நிர்வாகிகளையும் கைது செய்ய தமிழக முதல்வர் உடனடியாக உத்தரவிட வேண்டும்.என்று பதிவிட்டுள்ளார்.

பெண்களுக்காக குரல் கொடுக்கும், திமுக பெண் எம்.பி.யான கனிமொழியின் பொதுக்கூட்டத்திலேயே இதுபோன்ற அவலம் நிகழ்ந்துள்ளது, பெண்களுக்கு திமுகவினர் கொடுக்கும் மரியாதை எவ்வளவு என்பது அம்பலமாகி உள்ளது. பெண் போலீசாருக்கு ஏற்பட்ட களங்கத்தை போக்க  முன்வராத காவல்துறை உயர்அதிகாரிகளின்  நடவடிக்கை பெண் போலீசாரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.