மும்பை:

பிரபல இந்தி பாடகி கனிகா கபூருக்கு கொரோனா தொற்று 5வது தடவை நடத்தப்பட்ட சோதனையிலும் உறுதியாகி உள்ளது. இதனால், அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி மற்றும் பார்ட்டிகளில் பங்கு கொண்டவர்கள் பீதியில் உள்ளனர்.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு 48 மணி நேரத்திற்கு ஒரு முறை ரத்தப் பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். அதன்படி,   பாலிவுட் பாடகி கனிகா கபூரின் கொரோனா வைரஸ்க்கான ஐந்தாவது மாதிரி சோதனையும் நேர்மறையானதாக வெளிவந்துள்ளது.

பாடகி கனிகா கபூர் தற்போது,  சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எஸ்ஜிபிஜிம்ஸ்) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கனிகா கபூர் தற்போது நலமாக உள்ளார், அவர் கவலைப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை  என்று அந்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் ஆர். கே. திமான் தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே கனிகா கபூரில் பார்ட்டிகளில் கலந்துகொண்டவர்கள் கவலையில் உள்ள நிலையில், அவருக்கு கொரோனா 5வதமுறையாக உறுதி செய்யப்பட்டுள்ளதால் தற்போது  பீதியில் உள்ளனர்.