Skip to content
  • Sat. Jul 11th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா சினி பிட்ஸ்

வீடு இடிப்பு: உத்தவ்தாக்கரே அரசு மீது ரூ.2கோடி நஷ்டஈடு கேட்டு கங்கனா வழக்கு!

Sep 16, 2020

மும்பை: வீதி மீறியதாக கூறி, தனது பங்களாவை அவசரம் அவசரமாக இடித்ததற்கு ரூ.2 கோடி இழப்பீடு  வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நடிகை கங்கனா, மகாராஷ்டிரா மாநில அரசு மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

முப்பை திரையுலகில் நிகழும் போதைப்பொருள் குறித்து, நடிகை கங்கனா கருத்து தெரிவித்ததால், ஆளும் சிவசேனா அரசுக்கும், கங்கனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், கங்கனாவுக்கு சிவசேனா மிரட்டல் விடுத்து. அவர் மும்பை வர முடியாது என்று மிரட்டப்பட்ட நிலையில், அவருக்கு மத்தியஅரசு இசட்பிளஸ் பாதுகாப்பு வழங்கியது.  அதனால் அவர் மும்பை வந்து சென்றார்.

இதற்கிடையில், மும்பையில் உள்ள அவரது வீடு, ஏற்கனவே வாங்கப்பட்ட அனுமதியை மீறி படிக்கட்டுக்கு கீழே கழிவறை அமைத்துள்ளதாகவும், வீட்டை அலுவலகமாக மாற்றி இருப்பதாகவும், வீட்டின்  ஒருபகுதியை மும்பை மாநகராட்சி நிர்வாகம் குற்றம் சாட்டியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கங்கனா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு வருவதற்குள், கடந்த 9-ந்தேதி கங்கனாவின் வீட்டின் ஒரு பகுதியை மாநில அரசு இடித்தது. இது கடுமையான விமர்சனத்தை எழுப்பியது.

இது தொடர்பாக மாநில கவர்னரை சந்தித்து புகார் கொடுத்த கங்கனா, மும்பை உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார். ஏற்கனவே தொடரப்பட்டுள்ள வழக்கில், கங்கனாவின் வீட்டை இடிக்க  நீதிபதி கதாவல்லா தலைமையிலான அமர்வு இடைக்கால தடை விதித்தது.

இந்த நிலையில், தற்போது, அந்த மனுவில், கங்கனா நேற்று திருத்தம் செய்து, நஷ்டஈடு கேட்டு மனுவை சமர்ப்பித்துள்ளார். அதில்,  பொதுமக்களை பாதிக்கும் சில விஷயங்களை கையாள்வது தொடர்பாக, சமீபத்தில் நான் தெரிவித்த கருத்துகளால், மராட்டிய மாநில அரசுடன் மோதல் ஏற்பட்டது. குறிப்பாக, அரசில் அங்கம் வகிக்கும் ஒரு அரசியல் கட்சியில் இருப்பவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. அதன் விளைவாக, அந்த கட்சி ஆளுங்கட்சியாக உள்ள மும்பை மாநகராட்சி, என் பங்களாவை இடித்தது.
பங்களாவை பழுதுபார்க்க நான் 2018-ம் ஆண்டு அனுமதி பெற்றிருந்தேன். ஆனால், கடந்த 7-ந்தேதி மாநகராட்சி திடீரென நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு பதில் அளிக்க வெறும் 24 மணி நேரமே அவகாசம் அளிக்கப்பட்டது. அதற்குள் நான் பதில் அளித்தபோதிலும், அவசரகதியில் நிராகரிக்கப்பட்டது.

மறுநாளே மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்களாவை இடித்தனர். அவர்கள் ஏற்கனவே அங்குதான் முகாமிட்டு இருந்தனர். எனவே, பங்களாவை இடிக்க வேண்டும் என்ற உள்நோக்கம் மாநகராட்சியிடம் இருந்துள்ளது. அதன் செயலை ‘சட்ட விரோதம்’ என்று அறிவிக்க வேண்டும்.

மாநகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எனக்கு ரூ.2 கோடி இழப்பீடு அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு வரும்  22-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.

Post navigation

கொரோனா – இந்தியாவில் தொற்றியோர் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்தது!
வெளியானது அக்ஷரா ஹாசனின் ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் …..!

Related Post

இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

இந்தியா

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை தொடர்பாக பீகார் மற்றும் உ.பி.யில் 3 பேர் கைது

இந்தியா

மே 9-ல் மேற்கு வங்கம், மே 12-ம் தேதி அசாம் மாநிலங்களில் பாஜக அமைச்சரவை பதவியேற்பு விழா:

உலகம்

உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar
உலகம்

அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

July 10, 2026 Sundar
உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer