இந்தியா டுடே கான்க்ளேவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்கனா ரனாவத் “எனது முதல் உறவு எனது 17-18 வயதில் துவங்கியது. நானும் நண்பர் ஒருவருடன் உறவில் இருக்க விரும்பினேன். ஒரு அழகான பஞ்சாபி பையன் அவர் . நான் இந்த விளையாட்டிற்கு மிகவும் புதியவள் என்பதை அவர் கண்டறிந்தார்.

“என்னால் அவரை முத்தமிட முடியவில்லை, மேரா மு ஃப்ரீஸ் ஹோ கயா தா (என் வாய் உறைந்தது, என்னால் நகர முடியவில்லை). லட்கே நே போலா மு ஹிலாவ் தோ ஸாரா! (அவர் சொன்னார், உன் வாயை கொஞ்சம் அசை என!)” என்று வெளிப்படையாக பேசினார் என்று தெரிவித்தார் .

தற்போதைய காலக்கட்டத்தில் திருமணத்திற்கு முன்பு பாலுறவு என்பது குற்றமாக பார்க்கப்படுகிறது , இது முற்றிலும் தவறு என்று கூறினார் .

முந்தைய காலத்தில் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு, அவருடன் மட்டுமே நமது உணர்ச்சிகளை அடக்கிக்கொள்ளுதல் என்ற நடைமுறை இருந்தது. இந்த நடைமுறையால் தான் பல யுத்தங்கள் நடைப்பெற்றது. தற்போது இந்த முறைமை மாற்றப்பட வேண்டும். பெற்றோர் தங்களது பிள்ளைகள் பாலியல் உறவில் ஈடுபடுவது தெரிந்தால் மகிழ்ச்சியடைய வேண்டும், அதே சமயம் பாதுகாப்பாக உறவு மேற்கொள்வது குறித்து ஊக்கப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.