ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் அட்லீ இயக்கியுள்ள ஜவான் திரைப்படம் உலகம் முழுக்க நாளை ரிலீசாக உள்ளது.

இதனை அடுத்து திரையுலக பிரபலங்கள் ஷாருக்கானின் ஜவான் படம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஷாருக்கானின் விடாமுயற்சி, கடின உழைப்பு மற்றும் பணிவு ஆகியவற்றுக்காக கிங் கானுக்கு தலைவணங்குகிறேன் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்கனா ரணாவத் பதிவிட்டுள்ளார்.

90’களில் வெளியான பாலிவுட் படங்கள் மூலம் பெண்களைக் கவர்ந்த லவ்வர் பாயாக வலம் வந்த ஷாருக்கான் நாற்பது வயதைக் கடந்த தனது ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்திருக்கிறார்.

நடுவில் சிறு சுணக்கம் ஏற்பட்டபோதும் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வலம் வந்த ஷாருக்கானின் ஜவான் படம் வெற்றியடைய வேண்டும் என்று கங்கனா ரணாவத் பதிவிட்டுள்ளார்.