தராபாத்

பிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைவராக கேன் வில்லியம்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் பந்தயத்தின் போது பந்தை ஆஸ்திரேலிய அணி வீரர் பான்கிராப்ட் சேதப்படுத்தியது தொலைக்காட்சி வீடியோ பதிவில் தெரிய வந்தது.    அதனால் ஆஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்மித், துணைத் தலைவர் டேவிட் வார்னர் ஆகியோருக்கு கிரிக்கெட் போட்டிகளில் ஒரு வருடம் கலந்துக் கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனால் ஸ்மித், வார்னர் ஆகிய இருவருக்கும் ஐபில் போட்டிகளில் விளையாட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் தடை விதித்தது.   அதையொட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பொறுப்பில் இருந்து ஸ்டீவ் விலக்கப்பட்டு ரஹானே தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.

டேவிட் வார்னர் நேற்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இருந்து விலகினார்.   அதை ஒட்டி நியுஸிலாந்து நாட்டின் கேன் வில்லியம்சன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.   27 வயதான கேன் வில்லியம்சன் மட்டும் தற்போது ஐபிஎல் போட்டி அணித் தலைவர்களில் வெளிநாட்டவர் ஆவார்.   மற்ற ஏழு அணிகளுக்கும் இந்திய வீரர்களே அணித் தலைவர்களாக உள்ளனர்.