டில்லி

சிபிஎஸ்ஈ வாரியம் கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் முக்கிய புள்ளியான விக்கி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிபிஎஸ்ஈ வாரியம் நடத்தும் 12ஆம் வகுப்பு பொருளியல் மற்றும் 10ஆம் வகுப்பு கணித வினாத்தாட்கள் வாட்ஸ்அப் செயலி மூலம் பரவியது.    இந்த செய்தி வாரிய தலைவருக்கும் அனுப்பப் பட்டு அவர் விசாரணைக்கு உத்தரவிட்டார்.   இந்நிலையில் வாரியம் மறு தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

இந்நிலையில் ராஜிந்தர் நகர் பகுதியில் பயிற்சி மையம் (டியூஷன் செண்டர்) நடத்தி வரும் விக்கி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   இந்த கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் இவர் முக்கியப் புள்ளி எனக் கூறப்படுகிறது.

இத்துடன் டில்லியின் புறநகர் பகுதியில் உத்தம் நகர் மற்றும் ரோகினி மெட்ரோ ஆகிய இடங்களில் ரூ. பத்தாயிரத்தில் இருந்து ரூ.15000க்கு இந்த வினாத்தாட்களை ஒரு கும்பல் விற்றது தெரிய வந்துள்ளது.    எனவே டில்லி போலிசார் அந்தப் பகுதிகளில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்