காஞ்சிபுரம்:
நாளை முதல் ஊரடங்கு என்பதால் மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம் கூட்டமாக சமூக இடைவெளியின்றி அசைவ பிரியர்கள் குவிந்தனர்.

கொரோனா நோய் வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையாக நாளை முதல் முழு ஊரடங்கு உத்தரவு ஒருவாரத்திற்கு கடைபிடிக்க தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதனால் இன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை அனைத்து கடைகளும் செயல்படலாம் என அறிவிப்பு விடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அறிவிப்பினை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காலை 6 மணி முதலே அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலையம் அருகே செயல்பட்டு வரும் மீன் மார்க்கெட்டில் அதிக அளவில் மக்கள் ஒன்றுகூடி சமூக இடைவெளி பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக நின்று மீன்கள் மற்றும் இறைச்சிகளை அசைவ பிரியர்கள் வாங்கி செல்கின்றனர்.

இன்றுடன் முழு ஊரடங்கு உத்தரவு தளர்வுகள் உடன் அறிவிப்பு வரும் வரை இறைச்சி கடைகள் மூடப்படும் என்பதால் மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகள் மூடப்படுவதால் பொதுமக்கள் அதிக அளவில் கூட்டம் கூட்டமாக சமூக இடைவெளியின்றி அசைவ பிரியர்கள் வாங்கி செல்கின்றனர்.